Apr 2, 2026 - 06:36 AM -
0
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், சண்டிகர், செக்டர் 37 இல் இயங்கி வரும் பஞ்சாப் பாஜக அலுவலகம் அருகே நேற்று (01) மாலை கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 5 மணியளவில் வெடிச்சத்தம் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, அலுவலகம் அருகே கையெறி குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணைக்காக அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே வெடிகுண்டின் பாகங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது ஒரு கச்சா வெடிகுண்டு என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
