Header Logo
SLIC
கிழக்கு
மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

Apr 2, 2026 - 12:08 PM

மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம் 6 இல் வகுப்பில் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் பின்னர் தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்ற இச்சிறுவன் பிரதான வீதியைக் கடக்கின்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாகத தெரிவிக்கப்படுகிறது. 

மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்யததாகவும் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவையிலுள்ள மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தவேளை சிறுவன் திடீரென வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278