Header Logo

சினிமா
கர்ப்பம் குறித்த நடிகையின் பதிவு

Apr 2, 2026 - 02:23 PM -

0

கர்ப்பம் குறித்த நடிகையின் பதிவு

சினிமாவில் சர்ச்சை என்றாலே 'டக்'கென நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று, பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கிண்ணத்தை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இந்திய அணி கிண்ணம் வென்றபின் 'கப்சிப் ஆகிப்போனார். 

அதனைத்தொடர்ந்து தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிட்டு, பின்னர் இது விழிப்புணர்வுக்காக செய்த முயற்சி என்று சப்பைக்கட்டு கட்டினார். 

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது போல உள்ள புகைப்படத்தை அவர் நேற்று 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அது எப்படி சாத்தியம்? குழந்தைக்கு தந்தை யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். 

ஆனால் உலக முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1 நேற்று ரசிகர்களை ஏமாற்றும் முயற்சியாக பூனம் பாண்டே இப்படி பதிவு வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பூனம் பாண்டேவை ரசிகர்கள் கண்டபடி வார்த்தைகளை பதிவிட்டு வறுத் தெடுத்து வருகிறார்கள்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title