Header Logo

வடக்கு
மக்கள் எதிர்ப்பால் இயக்கச்சி நில அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்

Apr 2, 2026 - 04:01 PM -

0

மக்கள் எதிர்ப்பால் இயக்கச்சி நில அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமிற்காக, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு இன்று திட்டமிடப்பட்டிருந்தது. 

இராணுவத்தின் இந்த நில ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று காலை 8.00 மணியளவில் இராணுவ முகாம் முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதில் கலந்துகொண்ட காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், இராணுவத்திற்கும் ஆளும் தரப்பிற்கும் எதிராகப் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 

இந்த நில அளவீட்டுப் பணிகளால் நில உரிமையாளர்கள் தமது வாழ்வாதாரக் காணிகளை நிரந்தரமாக இழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. 

பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவும், மக்களின் தொடர் போராட்டத்தினாலும் குறித்த நில அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சந்திரகுமார், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title