Apr 2, 2026 - 10:33 PM -
0
நாட்டின் தற்போதைய நீர்முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் - நினோ நிலைமை மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் முகாமைத்துவம் குறித்த இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்கால எதிர்வுகூறல்களின்படி இவ்வருடம் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி குறித்தும், தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு குறித்தும் இங்கு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் விடயங்கள் ஆராயப்பட்டன.
குறிப்பாக, வலுசக்தி விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக நீர்மின் உற்பத்தி, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை வழங்குதல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அவசியமான நீர் முகாமைத்துவம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
