Header Logo
SLIC
உலகம்
நிலவை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்தது ஆர்டெமிஸ் II!

Apr 4, 2026 - 03:01 PM

நிலவை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்தது ஆர்டெமிஸ் II!
Mobitel Inner 1278
EDEX Inner

ஆர்டெமிஸ் II (Artemis II) செயற்திட்டமானது தற்போது தனது பயணத்தில் பாதியை விட அதிக தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த செயற்திட்டம் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆரம்பமானது.

விண்வெளி ஆய்வாளர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் (Orion) விண்கலம், பயணத்தைத் தொடங்கி சில மணிநேரங்களிலேயே ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் (SLS) ரொக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது. இந்த திட்ட குழுவினராக ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், ஜெரமி ஹேன்சன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இணைந்துள்ளனர்.

ஆர்டெமிஸ் II குழுவினர் நிலவை நோக்கிப் பயணிக்கும் வேளையில் எடுத்த பூமியின் முதலாவது தெளிவான புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. திட்டத்தின் கட்டளை அதிகாரி ரீட் வைஸ்மேன் என்பவரால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ''HELLO WORLD'' என அழைக்கப்படுகிறது.

பூமியின் பகல் மற்றும் இரவுப் பகுதிகள் தெளிவாகப் பிரிந்து தெரியும் அற்புதமான காட்சி வைஸ்மேனின் கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்துக் கனேடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹேன்சன் குறிப்பிடுகையில், "நிலவொளியால் ஒளிரும் பூமியின் இருண்ட பக்கத்தின் அழகான காட்சி தற்போது எமக்குத் தெரிகிறது. இது மிகவும் அற்புதம்!" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு தமது அனுபவங்களை விவரிக்கும் வீடியோ காட்சி தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278