Header Logo

செய்திகள்
​வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

Apr 5, 2026 - 07:44 AM -

0

​வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (05) தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

அரசியல் தலையீடுகளின் அடிப்படையில் வைத்தியர்களின் இடமாற்றங்களை முன்னெடுப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தது. 

அதற்கமைய, இன்று முற்பகல் 8.00 மணி முதல் மீண்டும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். 

இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக அலகுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 

இதேவேளை, இன்று கூடவுள்ள அந்தச் சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்த மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title