Header Logo
Mogo Academy

ஜோதிடம்
நாளை பிறக்கும் பராபவ ஆண்டின் சுப நேரங்கள்

Apr 13, 2026 - 10:27 PM -

0

நாளை பிறக்கும் பராபவ ஆண்டின் சுப நேரங்கள்
Mobitel inner

பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை (14) மலரவுள்ளது. 

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் சித்திரை புத்தாண்டானது வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை காலை 8 மணி 40 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை காலை 9 மணி 32 நிமிடத்துக்கும் பராபவ வருடம் பிறக்கிறது. 

புத்தாண்டு அன்று அதிகாலையில் விழித்ததும் முதலில் மங்களகரமான பொருட்களைப் பார்ப்பது வழக்கம். தங்கம், வெள்ளி, பணம், முக்கனிகள் (மா, பலா, வாழை), பூக்கள் மற்றும் கண்ணாடி அடங்கிய தட்டை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து, மறுநாள் காலையில் அதைப் பார்ப்பார்கள். 

இது அந்த ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கையாகும். 

பின்னர் மருத்து நீர் வைத்து நீராடுவது வழக்கமாகும். 

மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.40 மணிமுதல் மதியம் 12.40 மணிவரையில் கிழக்கு திசை நோக்கி பார்த்து வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருக்கணித பஞ்ஞாங்கத்தின் படி மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணிமுதல் பகல் 1.32 மணி வரை சந்தர்ப்பம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு நிற கரை வைத்த வௌ்ளை நிற பட்டாடை மற்றும் பவளம் அணிவதும் சிறப்பாகும். 

சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் - திருவாதிரை, புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் ஆகும்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara