Header Logo

செய்திகள்
புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

Apr 10, 2026 - 12:39 PM -

0

புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 

இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். 

பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், இதற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பெண்களுக்கான கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்கு முதல் நாளே சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில் அவை மீண்டும் பொருத்தப்பட்டதன் பின்னர் நேற்று (09) இரவு இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இது ஒரு திட்டமிடப்பட்ட குழுவின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், பஸ் நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 

அரசியலில் நமக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இது பொதுமக்களின் சொத்து, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. 

இவற்றுக்குச் சேதம் விளைவிக்க இடமளிக்க முடியாது, இதற்கு எதிராக நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம். 

அதேபோல் இங்கு பாதுகாப்பையும் பலப்படுத்துவோம். சிசிடிவி (CCTV) கமராக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதனை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title