Header Logo

செய்திகள்
ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனா

Apr 7, 2026 - 10:20 PM -

0

ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனா

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு எதிராக வாக்களித்ததே இதற்குக் காரணமாகும். 

பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் சயானி தலைமையில் நடைபெற்ற இந்தத் தீர்மானமிக்க கூட்டத்தில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பல வாரகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய (VII ஆவது அத்தியாயம்) கடுமையான நிபந்தனைகளைக் கொண்டிருந்த இத்தீர்மானம், படிப்படியாகத் தளர்த்தப்பட்டு இறுதியில் "பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்" மட்டத்திற்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

title