Header Logo

சினிமா
தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் கடைசி இன்ஸ்டா போஸ்ட்!

Apr 6, 2026 - 05:34 PM -

0

தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் கடைசி இன்ஸ்டா போஸ்ட்!

சென்னையில் பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி. இவர் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துள்ளார். 

இலங்கையை சேர்ந்த இவர் பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தங்கி வந்தார். 

நேற்று (06) இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், எப்பொழுதும் சந்தோஷமாக சிரித்த முகமாக இருந்த சுபாஷினி இப்படி தற்கொலை செய்து கொள்வார் என்று நினைக்கவே இல்லை என சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வாழ்க்கை தற்போது இப்படித் தான் இருக்கிறது என தான் சந்தோஷமாக கென்யாவில் நடந்து சென்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் சுபாஷினி. வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்கிறார் என்றார்கள் சமூக வலைதளவாசிகள். 

தற்போது அதே போஸ்ட்டிற்கு சென்று, சமூக வலைதளங்களில் போடுவதை எல்லாம் நம்பக் கூடாது போன்று. சுபாஷினி சந்தோஷமாக இல்லை. தற்கொலை செய்யும் அளவுக்கு வேதனை இருந்தாலும் சோஷியல் மீடியாவில் சந்தோஷமான முகத்தை மட்டும் காட்டியிருக்கிறார். உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். வாழ்க்கையில் அடுத்த நொடி நிச்சயமில்லை என தெரிவித்துள்ளனர் ரசிகர்கள். View this post on Instagram

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title