Header Logo

இந்தியா
குடும்பத்தோடு தற்கொலைக்கு முடிவெடுத்த தவெக வேட்பாளர்!

Apr 5, 2026 - 08:33 AM -

0

குடும்பத்தோடு தற்கொலைக்கு முடிவெடுத்த தவெக வேட்பாளர்!

 என் மீது கஞ்சா வழக்கு இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் என பேராவூரணி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் வேதனை தெரிவித்துள்ளார்.


2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பேராவூரணி தவெக வேட்பாளரான சந்திர காண்டீபன் மீது கஞ்சா வழக்கு இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சந்திர காண்டீபன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் பரப்பிரையில் ஈடுபட்டு வருகிறார்.


இந்த நிலையில் சந்திர காண்டீபன் தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது கஞ்சா வழக்கு ஒன்றில் சந்திர காண்டீபன் கைதாகி சிறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மீது குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட அடிதடி வழக்குகளும்  உள்ளதாக சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் குற்றப் பின்னணி உள்ளவர் எப்படி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது தொடர்பான பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் சந்திர காண்டீபன் வீடியோ மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “என் மீது கஞ்சா வழக்கு இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் விசாரித்து சொல்லுங்கள். என் மீது எந்தவித வழக்குகளும் கிடையாது. என் மகள்கள் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களின் நண்பர்கள் உங்க அப்பாவை பற்றி ஏன் தப்பாக பேசுகிறார்கள் என கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். என் மனைவி ஆசிரியையாக உள்ளார். அவரிடம் அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்டு சங்கடப்படுத்துகிறார்கள்.


நாங்கள் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். பேராவூரணி தொகுதி மக்கள் இதன் சதி பின்னணியை புரிந்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அப்படி சொல்லலாம். எதுவுமே சொல்லாமல் ஏன் இப்படி தவறாக சொல்கிறீர்கள். மன உளைச்சலால் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தோம். விஜய் அழைத்து அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும். நீங்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வேலை பாருங்கள். நான் வந்து உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்கிறேன் என சொன்னார். மக்கள் அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

 

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title