Header Logo

செய்திகள்
இன்று 12 மணிநேர நீர்வெட்டு

Apr 5, 2026 - 09:02 AM -

0

  இன்று 12 மணிநேர நீர்வெட்டு

ஹோமாகம பகுதியில் இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

வறண்ட வானிலையினால் நீர் விநியோகத்தை நிறுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்திருந்ததுடன், இதன்படி 24 மணிநேர நீர்வெட்டை அமல்படுத்த முதலில் தீர்மானிக்கப்பட்டது. 

எனினும், அந்த காலப்பகுதி பின்னர் 18 மணிநேரமாகவும், தற்போது 12 மணிநேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நீர் விநியோகத்திற்கு மேலும் தடைகள் ஏற்பட்டால், பவுசர்கள்  மூலம் நீர் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது. 

அதற்கமைய, ஏனைய மாவட்டங்களில் உள்ள நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான பவுசர்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்தார். 

நீர் விநியோகத் தடையினால் தற்போது சுமார் 20,000 நீர் இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர் சந்தன பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title