Header Logo

செய்திகள்
மலையகத்தில் களைகட்டிய உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

Apr 5, 2026 - 11:34 AM -

0

மலையகத்தில் களைகட்டிய உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா, இன்று (05) மலையகப் பகுதிகளில் மிகுந்த பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. 

இதனை முன்னிட்டு ஹட்டன் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பிரதான தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன. 

ஹட்டன் புனித சிலுவை தேவாலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்ற பிரதான ஆராதனைகளுக்கு, அந்த ஆலயத்தின் திருத்தலப் பொறுப்பாளர் அருட்தந்தை எட்வின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார்.

இதேவேளை, நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றதுடன், நானுஓயா புனித ரீட்டா தேவாலயத்தில் பங்குத்தந்தை சற்குண ராஜா தலைமையில் உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடைபெற்றன. 

இந்த விசேட திருப்பலிகளில் பெருமளவிலான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், இராணுவம், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேவாலயங்களைச் சூழ பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title