Apr 5, 2026 - 11:35 PM -
0
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து 'அத தெரண' இணையத்தளம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் நாளை (06) இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
