Header Logo

சினிமா
ஆபாச இணையதளத்தில் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்!

Apr 6, 2026 - 11:02 AM -

0

ஆபாச இணையதளத்தில் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்!

முன்னாள் கனவு கன்னி மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவிலும் கால் பதித்துள்ளார். 

ஜான்வி கபூரை விரைவில் தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னணி இயக்குனர்கள் 2 பேர் அவரிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதற்கிடையில் ஆபாச இணையதளத்தில் தனது புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு ஜான்வி கபூர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 

அவர் கூறும் போது, "நான் பாடசாலை படித்த காலத்தில் ஆண் நண்பர்கள் சிலர் ஆபாச இணையதளத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் எனது புகைப்படமும் இருந்ததை கண்டு அதிர்ந்து போனேன். இதனால் குழப்பத்தில் தவித்தேன். 

இன்றளவும் எனது போலி ஆபாச படங்கள் இணையத்தில் ஊடுருவி கிடப்பதைக் கண்டு மனம் வலிக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் அமைதியின்றியும் தவிக்கிறேன். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அப்போதுதான் பிரபலங்கள் நிம்மதியாக இருக்க முடியும்", என்று குறிப்பிட்டார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title