Header Logo

சினிமா
விஜய் மனதில் பாஜக இருக்கிறது!

Apr 6, 2026 - 04:48 PM -

0

விஜய் மனதில் பாஜக இருக்கிறது!

30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை போல் புதுச்சேரியில் தவெக தனித்து தேர்தலை சந்திக்கிறது. 

இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 4 ஆம் திகதி அங்கு பரப்புரை மேற்கொண்டார். அதன்படி மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமுவும், பாஜக சார்பில் செல்வமும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், அந்தத் தொகுதியில் ராமுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்கள்” என பேசினார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 

இந்நிலையில், நேற்று (05) புதுச்சேரியில் பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சித் தலைவர் குஷ்பு, அங்கு ரோடு ஷோவும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்து பேசிய குஷ்பு, “விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள், அவரை பற்றி பேச வேண்டாம். அவர் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுவை பிரச்சாரத்தின் போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை குறிப்பிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title