Header Logo

சினிமா
இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த துரந்தர்!

Apr 6, 2026 - 06:15 PM -

0

இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த துரந்தர்!

இந்திய சினிமா வரலாற்றில் 2 பாகங்களும் 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது இந்த துரந்தர் 1 மற்றும் 2 ஆம் பாகங்கள். 

கடந்த ஆண்டு டிசம்பர் 5 இல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உலகளவில் 1,350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிரள வைத்தது. ரன்வீர் சிங்கின் அதிரடி நடிப்பு மற்றும் ஆதித்ய தரின் இயக்கம் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது. 

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19 ஆம் திகதி வெளியான இரண்டாம் பாகம், பாக்ஸ் ஆபீஸில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளது. ரிலீசான வெறும் 18 நாட்களில் உலகளவில் சுமார் 1600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இரண்டு பாகங்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 2,900 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, இந்திய சினிமாவின் மிக வெற்றிகரமான தொடராக உருவெடுத்துள்ளது. 

இதேபோன்று வட அமெரிக்க மார்க்கெட்டிலும், உள்நாட்டு வசூலிலும் 'பாகுபலி 2' படத்தின் சில முக்கியமான சாதனைகளை இத்திரைப்படம் முறியடித்துள்ளது. 

ரன்வீர் சிங்குடன் இணைந்து சஞ்சய் தத், மாதவன், அக்‌ஷய் கண்ணா மற்றும் அர்ஜுன் ராம்பால் எனப் பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த இமாலய வெற்றியின் மூலம், ரன்வீர் சிங் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்துள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title