Header Logo

செய்திகள்
ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை: உலக வரலாற்றின் மிக முக்கிய இரவு இதுவா?

Apr 7, 2026 - 06:21 PM -

0

ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை: உலக வரலாற்றின் மிக முக்கிய இரவு இதுவா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

 

குறித்த பதிவில், அமெரிக்க நேரப்படி இன்றைய இரவு ஒரு முழு நாகரிகத்தினதும் முடிவாக அமையக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

 

அவ்வாறு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், அது பெரும்பாலும் நிகழ வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

எனினும், தீவிரத்தன்மை குறைந்த மற்றும் புத்திசாலித்தனமான மனப்பாங்கு இருக்கும் பட்சத்தில், ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவு அமையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். 

 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

title