Header Logo
SLIC
மலையகம்
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!

Apr 8, 2026 - 04:56 PM

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!
Mobitel Inner 1278
EDEX Inner

மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வரட்சி காரணமாக நீர் பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளது இதனால் காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்துள்ளது என நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர். 

குறிப்பாக காசல்ரீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவிலிருந்து அதிகமாகத் தாழிறங்கியுள்ளது. 

அதன்படி இன்று (08) காலை 6 மணி நிலவரப்படி மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 47 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43.8 அடியாகவும் குறைந்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். 

இரு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கம் நிர்மாணிக்கும் போது காணப்பட்ட பல இடிபாடுகளும் தீவுகளும் மீண்டும் மேலோங்கியிருப்பதோடு நீர்த்தேக்க பகுதிமணல் தரையாக மாறியுள்ளது. 

இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்படும் நீர் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, அந்த நீர் களனி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. 

நீரேந்து பகுதிகளில் மேலும் வரட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில் பாரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் நீர் மின் உற்பத்தியில் பாரிய அளவில் பாதிப்படையலாம் எனவும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இக்காலப் பகுதியில் பொதுமக்கள் நீரினை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278