Header Logo

சினிமா
கெட்டமைன் ராணிக்கு 15 ஆண்டு சிறை - மேத்யூ பெர்ரி வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Apr 9, 2026 - 10:57 AM -

0

கெட்டமைன் ராணிக்கு 15 ஆண்டு சிறை - மேத்யூ பெர்ரி வழக்கில் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான 'பிரண்ஸ்' தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் மேத்யூ பெர்ரி. 

கடந்த 2023 அக்டோபர் 28, தனது 54 வயதில் மேத்யூ பெர்ரி லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

மனநலம் சார்ந்த பிரசனைகளுக்கு கேட்டமைன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மனஉளைச்சல் மற்றும் மனப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேத்யூ அதை குணப்படுத்துவதற்காக கெட்டமைன் உட்கொளள்ளத் தொடங்கியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கெட்டமைனுக்கு அடிமையாகி உள்ளார். 

இதனைப் பயன்படுத்தி இரண்டு வைத்தியர்களுடன் சேர்ந்து மேத்யூவின் உதவியாளர் அவருக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் மதிப்பில் கெட்டமைன் போதைப் பொருளைத் தொடர்ந்து வழங்கி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேத்யூவின் உதவியாளர், அந்த இரண்டு வைத்தியர்கள் உட்பட 5 பேர் பொலிஸ் சிக்கினர். 

இவர்களுள் முக்கியமானவர் லாஸ் ஏஞ்சல்சின் கெட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா (42 வயது). ஹாலிவுட் பிரபலங்களும் பணக்காரர்களும் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் ஜாஸ்வீன் சங்கா போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். 

மேத்யூவுக்கு அதிக கெட்டமைன் டோஸ்களை ஜாஸ்வீன் கொடுத்திருப்பது பொலிஸ் விசாரணையில் அம்பலமானது. லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சங்காவின் குடியிருப்பில் 79 பாட்டில்களில் திரவ கெட்டமைன்கள், 2000 மெத் மாத்திரைகள், கோகைன்கள் ஆகியவை பிடிபட்டன. 

எரிக் பிளெமிங் என்ற இடைத்தரகர் மூலம் மேத்யூவுக்கு சங்கா கெட்டமைன்களை விற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்தது. ஒரு குப்பி கெட்டமைன் 12 டொலர்கள் என்று இருந்த நிலையில் மெத்தியூவிடன் ஒரு குப்பி கெட்டமினை 1,000 டொலர்கள் வரை இந்த கும்பல் ஏமாற்றி விற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. 

கெட்டமைன் விற்பனையால் மரணம் விளைவித்தது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை 'கெட்டமைன் ராணி' என அறியப்படும் ஜஸ்வீன் சங்கா மீது சுமத்தப்பட்டது. 

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, மேத்யூ பெர்ரியின் மரணத்திற்குப் பிறகும் அவர் எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும், தொடர்ந்து அந்த போதைப்பொருளை விற்று வந்ததாகவும் வாதிடப்பட்டது. 

ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், பின்னர் தனது வாக்குமூலத்தை அவர் மாற்றிக்கொண்டார். 

இந்த சூழலில் மேத்யூ பெர்ரிக்கு போதைப்பொருள் விநியோகித்த வழக்கில் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜஸ்வீனைத் தவிர, மேத்யூவின் மரணம் தொடர்பான வழக்கை எதிர்கொள்பவர்களில் 2 வைத்தியர்கள் மற்றும் மேத்யூவின் தனிப்பட்ட உதவியாளர் ஆகியோரும் அடங்குவர். 

கடந்த ஆண்டு டிசம்பரில், சட்டவிரோதமாக கெட்டமைன் வழங்கியதற்காக வைத்தியர் சால்வடார் பிளாசென்சியாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு வைத்தியரான மார்க் சாவேஸுக்கு எட்டு மாதங்கள் வீட்டுக் காவல் விதிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 2024 முதல் பொலிஸ் காவலில் இருந்த ஜஸ்வீனுக்கு தற்போது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title