Header Logo

சினிமா
ஜனநாயகனை படத்தை யாரும் பகிர வேண்டாம்!

Apr 10, 2026 - 10:59 AM -

0

ஜனநாயகனை படத்தை யாரும் பகிர வேண்டாம்!

ஜனநாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம் என அப்படத்தின் இயக்குநர் H.வினோத் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படம்தான் நடிகர் விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படம் இப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போது வரை படம் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. 

இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் இயக்குநர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title