Header Logo

சினிமா
நூற்றுக்கணக்கானோரின் ரத்தம்!

Apr 10, 2026 - 03:06 PM -

0

நூற்றுக்கணக்கானோரின் ரத்தம்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போது வரை இப்படம் வெளியாகவில்லை. 

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம் இணையத்தில் வெளியானதை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கானோரின் பேரார்வம், ரத்தம் மற்றும் வியர்வையின் மூலம் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டுத்தனமாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும். திரையரங்கு வெளியீடு வரும் வரை பொறுத்திருந்து, திரையரங்குகளிலேயே திரைப்படத்தைப் பார்வையிடுங்கள். 

இதற்குப் பொறுப்பானவர்கள் எவராயினும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

திறமைகளை மதியுங்கள். 

கடின உழைப்பை மதியுங்கள். 

திரையுலகத்தை மதியுங்கள் என கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title