Header Logo
SLIC
உலகம்
ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும்: டொனால்ட் ட்ரம்ப் உறுதி

Apr 11, 2026 - 11:35 AM

ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும்: டொனால்ட் ட்ரம்ப் உறுதி
Mobitel Inner 1278
EDEX Inner

ஈரான் போரின் தொடக்கத்திலிருந்து தெஹ்ரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) "மிக விரைவில்" திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

எனினும், இது ஒரு எளிதான காரியம் அல்ல என்பதை ஒப்புக்கொண்ட அவர், இது குறித்து மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. 

இதற்காக ஏனைய நாடுகள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும், ஆனால் அந்த நாடுகள் எவை என்பதை அவர் அடையாளப்படுத்தவில்லை. "மற்ற நாடுகளும் இந்த நீரிணையைப் பயன்படுத்துகின்றன. எனவே பல நாடுகள் முன்வந்துள்ளன, அவர்கள் உதவுவார்கள்," என்று ட்ரம்ப் கூறினார். 

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இந்த நீரிணை முடக்கப்பட்டுள்ளமை உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் வரலாற்றிலேயே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே இடம்பெறுகின்றது. 

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நேட்டோ (NATO) நட்பு நாடுகள் தவறியமை குறித்து ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ட்ரம்ப்பைச் சந்தித்த பின்னர், இந்த நீரிணையைப் பாதுகாக்க சில நாட்களுக்குள் உறுதியான வாக்குறுதிகளை அமெரிக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய அரசாங்கங்களுக்குத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியது. 

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

இந்த யுத்தம் உலக சந்தையை உலுக்கியதுடன் எண்ணெய் விலையையும் உயர்த்தியுள்ளது. முன்னதாக ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டியிருந்த ட்ரம்ப், கடந்த செவ்வாய்க்கிழமை தெஹ்ரானுடன் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து இன்னும் ஸ்தம்பித நிலையிலேயே உள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278