Header Logo

செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை குறித்த அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது ஈரான்

Apr 12, 2026 - 09:53 AM -

0

ஹோர்முஸ் நீரிணை குறித்த அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது ஈரான்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையை ஈரான் மறுத்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் பயணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்திருந்தது. எனினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. 

மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவில் கப்பல்கள் மட்டுமே நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் கூறியுள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் எதிராகக் கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title