Header Logo

சினிமா
மீண்டும் படம் நடிக்கும் விஜய்?

Apr 13, 2026 - 02:02 PM -

0

மீண்டும் படம் நடிக்கும் விஜய்?

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். 

அவர் நடித்த ஜனநாயகன் படத்தை வௌியிடுவதற்காக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருந்தது. 

இது குறித்து நீதிமன்றம் வரை சென்றும் படத்தை வௌியிடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கவில்லை. 

இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிப்புகள் வௌியானது. விஜய்யும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேலைகளில் மும்முரமாக இறங்கினார். 

இதனால் ஜனநாயகன் படம் இந்த தேர்தலுக்கு பின்னர் திரையில் வௌியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

குறித்த சூழலில் ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே முழுபடமும் கடந்த வௌ்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. 

அதனை அறிந்த படக்குழுவினரும், தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்தனர். 

படம் முன்கூட்டியே லீக்கானதால் கே.வி.என் ப்ரடெக்ஸன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக புதிய படத்தில் நடித்து கொடுக்க விஜய் அதிரடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

அந்தப் படத்தை நெல்சன், அட்லி அல்லது லோகேஷ் ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் என குறிப்பிடப்படுகின்றது. 

இது விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title