Header Logo

சினிமா
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி!

Apr 14, 2026 - 06:08 PM -

0

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி!

தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியவர் தான் ராதாரவி. நடிகர் விஜய்யுடன் 5 இற்கும் மேற்பட்ட படங்கள் ராதாரவி நடித்திருக்கிறார். 

குறிப்பாக அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட சர்க்கார் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருப்பார்.

அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை ராதாரவி சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

அதில், ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், என்னை தனியாக அழைத்து பேசினார். முதலில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர், ஒரு விஷயம் கேட்கணும், தப்பா நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார். அதற்கு நான் சம்மதித்ததும், அவர் கேட்ட கேள்வி எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. 

எம்ஜிஆர் மீது நடந்த சூட்டிங் சம்பவத்திற்குப்பின் உங்கள் வீட்டில் என்ன நடந்தது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது, குடும்பத்தில் அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டார். 

இதுவரைக்கும் யாரும் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டதே கிடையாது, யார் தப்பு, உங்கள் அப்பா ஏன் அப்படி பண்ணினார் என்று தான் கேள்விகள் கேட்பார்கள். ஆனால் விஜய் மட்டும் அந்த சம்பவத்தின் மனிதநேய பக்கம் பற்றி கேட்டார். 

விஜய் அப்பவே வித்தியாசமா யோசிப்பார், அவர் ஆரசியலுக்கு வர்றார் என்றதும் அவர் அதற்கு சரியான ஆள்தான் என்று நினைத்தேன் என ராதாரவி தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title