Header Logo

சினிமா
கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த திவாகர்!

Apr 15, 2026 - 12:13 PM -

0

கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த திவாகர்!

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கஜினி சூர்யாவின் நடிப்பை Recreate செய்கிறேன், வாட்டர்மெலன் சீனை தெறிக்க விடுகிறேன் என தர்பூசுடன் வீதி வீதியாகச் சுற்றித் திரிந்தவர்தான் திவாகர். தன்னைத்தானே வாட்டர்மெலன் ஸ்டார், நடிப்பு அரக்கன் என கூறிக்கொண்டு அந்நியனாகவும், அம்பியாகவும் அவதாரம் எடுத்து சுற்றி வந்தார். 

கடந்த பிக் பாஸ் சீசனிலும் பங்கேற்றார். அங்கேயும் பல நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று சர்ச்சைகளில் சிக்கினார். இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பொலிஸ் நிலையத்தில், திவாகர் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஈவிபி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடக்கும் சமையல் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதாகவும், அங்கு தன்னுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ், அசார் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தன்னை அவர்கள் இரும்புக்கம்பியால் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார். 

மாகாபா, கானா வினோத் தாக்கியதில் தனக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன்னைத் தாக்கிய நான்கு பேரும் பொலிஸ் நிலையத்தில் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தார். இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சூழலில் நசரத்பேட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ், அசார் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 

செட்டில் சில தவறான விஷயங்களை அவர் செய்ததால் சேனல் நிர்வாகமே அவரை வெளியே அனுப்பியது. ஏற்கனவே விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைகளிடம் முகம் சுளிக்கும் அளவுக்கு பேசிவிட்டார். அவர்கள் திவாகர் மீது புகார் கொடுக்க அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கினர். இதனை நான் தான் செய்தேன் என நினைத்து என் மீது அவருக்கு கோபம். 

நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நிகழ்ச்சியில் நின்று கொண்டு வேலை பார்ப்பேன். எப்படி மது அருந்திவிட்டு நிற்க முடியும்? திவாகர் தகாத வார்த்தையில் பெண்களிடம் தப்பாக பேசுகிறார். நிகழ்ச்சியில் கணவன் முன்னாடியே அவரது மனைவியின் கையைப் போட்டுக்கொண்டு ''இவ்வளவு நாள் அவர் கூட இருந்துட்ட ஒருநாள் என்கூட இரு'' என்று தகாத வார்த்தைகளில் பேசுகிறார். 

ஆபாசமாக பேசுவது, சாதி பாகுபாடு பார்த்து பேசுவது என எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்." என்று பேசினர்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title