Header Logo

சினிமா
ஜனநாயகன் ரிலீஸ் திகதி குறித்து வெளிவந்த தகவல்!

Apr 15, 2026 - 04:14 PM -

0

ஜனநாயகன் ரிலீஸ் திகதி குறித்து வெளிவந்த தகவல்!

அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்பட்டது ஜனநாயகன். ஜனவரி மாதம் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் கிடைக்காத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. இதன்பின் தேர்தலுக்கு பின், மே மாதம்தான் ஜனநாயகன் வெளிவரும் என கூறப்பட்டது. 

இந்நிலையில், திடீரென ஜனநாயகன் திரைப்படத்தை யாரோ இணையத்தில் கசிய விட்டுவிட்டனர். இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இதுவரை 6 பேர் கைதாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், லோக்கல் கேபிள் சேனல் ஒன்றில் படத்தை ஒளிபரப்பினார்கள். அதற்கான நடவடிக்கையும் பொலிஸாரால் எடுக்கப்பட்டது. 

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், படத்திற்கான சென்சார் சான்றிதழை ஓரிரு நாட்களில் கொடுக்க சென்சார் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஜனநாயகன் படம் வருகிற ஏப்ரல் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளிவர வாய்ப்புள்ளது என்கின்றனர். 

ஜனநாயகன் திரைப்படத்தை MG (Minimum Guarantee) அடிப்படையில் 103 கோடி ரூபாவுக்கு தமிழக விநியோகஸ்தர்கள் வாங்கியிருந்தார்கள். இதில் 50% சதவீத தொகை அட்வான்ஸாக ரிலீஸுக்கு மும்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், படம் தற்போது லீக்காகிவிட்டதால், விநியோகஸ்தர்கள் தங்களது முடிவை மாற்றியுள்ளனர். 

சமீபத்தில் விநியோகஸ்தர்களை அழைத்து தயாரிப்பு நிறுவனம் பேசியுள்ளனர். இதில், ஜனநாயகன் திரைப்படத்தை MG (Minimum Guarantee) முறையில் அல்ல, டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில்தான் வெளியிடுவோம், அதுவும் இதற்கு முன் ஒப்புக்கொண்ட 103 கோடி ரூபாவுக்கு நாங்கள் தற்போது ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே 50% சதவீத தொகை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதால், இதன்பின் திரையரங்கம் மூலம் வரும் வசூலில் விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்திற்கு மேல் வசூல் கிடைத்தால், அதை கழித்துவிட்டு தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் பங்கு பிரித்துக்கொள்வார்கள். 

ஒருவேளை அந்த வசூலை கூட ஜனநாயகன் படம் செய்யவில்லை என்றால், இதில் ஏற்படும் நஷ்டத்தை கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக வெளிவரும் டாக்சிக் படத்தில் சரி செய்து கொள்வோம் என தயாரிப்பு நிறுவனத்துடன் விநியோகஸ்தர்கள் பேச்சு வார்த்தை நடந்துள்ளனர் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title