Header Logo

சினிமா
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சஞ்சு சாம்சன்!

Apr 15, 2026 - 05:27 PM -

0

கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சஞ்சு சாம்சன்!

இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணி வீரருமான சஞ்சு சாம்சன், நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட கேரள பிரபலம் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது சஞ்சு சாம்சன் 19.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த கீர்த்தி சுரேஷ் 18.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் 2வது இடம் சென்றுள்ளார். 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வரை, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட மலையாள பிரபலங்கள் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ்தான் நம்பர் 1 இடத்தில் இருந்தார். துல்கர் சல்மான், கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் போன்ற பலரையும் பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையை அவர் தக்க வைத்திருந்தார். 

ஆனால், ஒரே மாதத்தில் மொத்த காட்சியும் மாறியிருக்கிறது. கீர்த்தி சுரேஷை முந்தி, சஞ்சு சாம்சன் நம்பர் 1 இடத்துக்கு வந்திருக்கிறார். மார்ச் 6 ஆம் திகதி நிலவரப்படி, சஞ்சு இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில்தான் இருந்தார். ஆனால் இப்போது, 19.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். டி20 உலகக் கிண்ணத்திற்கு பிறகு, சஞ்சு சாம்சனின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென ஏறியிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட கீர்த்தி சுரேஷுக்கு இப்போது 18.8 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கீர்த்தி இரண்டாவது இடத்துக்கு வந்ததால், முன்பு மூன்றாவது இடத்தில் இருந்த நடிகர் துல்கர் சல்மான் இப்போது நான்காவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன்தான் தற்போது 16.6 மில்லியன் ஃபாலோயர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். துல்கர் சல்மானுக்கு 15.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title