Header Logo

செய்திகள்
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா சம்மதம்: ட்ரம்ப் அதிரடித் தகவல்

Apr 15, 2026 - 06:53 PM -

0

  ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா சம்மதம்:  ட்ரம்ப் அதிரடித் தகவல்

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறந்து வைப்பது குறித்து சீனா மகிழ்ச்சியடைவதாகவும், சீனாவுக்காகவும் உலகத்திற்காகவும் தாம் இதனைச் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில வாரங்களில் தாம் மேற்கொள்ளவுள்ள சீனப் பயணத்தின் போது, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனக்கு 'பெரிய' மற்றும் 'அழுத்தமான' கட்டித்தழுவல் மூலம் வரவேற்பளிப்பார் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

தாங்கள் இருவர் மிகவும் திறமையாகச் செயற்படுவதாகவும், சண்டையிடுவதை விட இது சிறந்தது அல்லவா? என்றும் அமெரிக்க ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், தாங்கள் இருவரும் சண்டையிடுவதிலும் மிகவும் வல்லவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் மற்றவர்களை விட அதனை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title