Header Logo
SLIC
மலையகம்
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

Apr 16, 2026 - 12:33 PM

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!
Mobitel Inner 1278
EDEX Inner

நுவரெலியா மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான வசந்தகாலக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள, கடந்த 14 ஆம் திகதி, நேற்று (15), இன்று (16) ஆகிய திகதிகளில் பெருந்திரளான மக்கள் வருகை தந்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நுவரெலியாவிற்கு மக்கள் வருகை தந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள், நுவரெலியா கிரகரி வாவியில் படகுச் சவாரிகளை மேற்கொண்டு மகிழ்ந்ததுடன், வாவிக் கரையில் அமைந்துள்ள அழகான மலர்ச் செடிகளையும் கண்டு ரசித்தனர். அத்துடன், உலங்குவானூர்தி (Helicopter) மற்றும் கடல் விமானம் (Sea Plane) ஆகியவற்றின் ஊடாக நுவரெலியா பிரதேசத்தின் இயற்கை அழகை வான்பரப்பிலிருந்து கண்டு மகிழ்ந்தனர். 

உலக நாடுகள் பலவற்றில் போர்ச் சூழல் நிலவி வருகின்ற போதிலும், நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கமும், நுவரெலியா மாநகர சபையும் இணைந்து மிகச் சிறந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. இதற்காகச் சுற்றுலாப் பயணிகள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வசந்தகாலக் கொண்டாட்டங்கள், இம்மாதம் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278