Header Logo

சினிமா
ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை வனிதா மகள் ஜோவிகா!

Apr 16, 2026 - 02:01 PM -

0

ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை வனிதா மகள் ஜோவிகா!

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மகளும், நடிகையுமான வனிதா தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார். இதை தொடர்ந்து ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் கடந்தசில மாதங்களாக வெளியாகி வந்தது. 

ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தையில் அவரது தாயாரான வனிதா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஜோவிகா. 

இந்த தகவலை படத்தில் தன்னுடைய தோற்றம் இடம் பெற்ற போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார் ஜோவிகா. 

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

‘எனது முதல் திரைப்படம் அதுவும் தெலுங்கில். எம்.எஸ்.ராஜுவுடன் நேரடியாக பணியாற்றுவது நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றும் ஒரு அனுபவமாகும். குறிப்பாக தேவி, வர்ஷம் ஒக்கடு உள்பட இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்து வளர்ந்தவள் நான். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். என்னை நீங்கள் நம்பி என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title