Header Logo

சினிமா
34 வழக்குகளுடன் வெளியான படம்!

Apr 16, 2026 - 05:21 PM -

0

34 வழக்குகளுடன் வெளியான படம்!

44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பல தடைகளை எதிர்கொண்டது. ஆனால், அதையும் மீறி படம் வெளியான பின்பு பெரிய அளவில் லாபம் பார்த்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பாலிவுட் சினிமாவில் இந்தப் படம் இன்றும் முக்கியமான ஒரு படமாக கருதப்படுகிறது. அது என்ன படம்? எதனால் அந்தப் படத்துக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது என்பது குறித்து பார்ப்போம். 

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.சோப்ரா. 4 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷன் என நாட்டின் உயரிய விருதுகளை வென்றவர். இந்தியில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர். இவர் இயக்கத்தில் வெளியான 

ஆனால், மத ரீதியாக ஒரு சமூகத்தை இந்தப் படம் புண்படுத்துகிறது என்பதாலும், பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததாலும், இந்தப் படத்தின் தலைப்பு ‘தலாக்’ என்பதிலிருந்து ‘நிக்காஹ்’ என மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ராஜ் பப்பர், தீபக் பராஷர் மற்றும் சல்மா ஆகா ஆகியோர் நடித்திருந்தனர். 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் கன்டென்ட் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் படம் தங்கள் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் 34 வழக்குகள் தொடுத்தனர். நடிகை சல்மா ஆகாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததோடு, நாட்டை விட்டு வெளியேறும்படியும் அவர் எச்சரிக்கப்பட்டார். திரையரங்குகளுக்கு வெளியே போராட்டங்கள் வெடித்தன, சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. 

பல்வேறு எதிர்ப்புகளை மீறி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்தது. 3 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் 9 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலை குவித்தது. பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகமான லாபத்தை ஈட்டியது. பாலிவுட்டில் அதிக வழக்குகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்த படங்களில் ஒரு படமாக இது கருதப்படுகிறது. இந்தப் படம் யூடியூப், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் ஆகிய ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title