Apr 19, 2026 - 08:39 PM -
0
புத்தாண்டு காலப்பகுதியில் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 1,170,830 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதன் மூலம் இந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் பயணித்த வாகனங்கள் மூலமே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டின் போது அதிவேக நெடுஞ்சாலைகளில் வருமானம் ஈட்டப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
ஏப்ரல் 10: வாகனங்களின் எண்ணிக்கை 161,847 - வருமானம் 59.8 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 11: வாகனங்களின் எண்ணிக்கை 153,807 - வருமானம் 58.2 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 12: வாகனங்களின் எண்ணிக்கை 118,684 - வருமானம் 45.2 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 13: வாகனங்களின் எண்ணிக்கை 84,211 - வருமானம் 31.6 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 14: வாகனங்களின் எண்ணிக்கை 91,776 - வருமானம் 34.3 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 15: வாகனங்களின் எண்ணிக்கை 139,480 - வருமானம் 52.5 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 16: வருமானம் 53 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 17: வாகனங்களின் எண்ணிக்கை 138,944 - வருமானம் 53 மில்லியன் ரூபா.
ஏப்ரல் 18: வாகனங்களின் எண்ணிக்கை 141,813 - வருமானம் 53 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம்.
