Header Logo

செய்திகள்
மகரகமவில் வீட்டின் மீது தீ வைப்பு - காரணம் வௌியானது

Apr 19, 2026 - 10:33 PM -

0

மகரகமவில் வீட்டின் மீது தீ வைப்பு - காரணம் வௌியானது

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (18) மாலை ஏற்பட்ட தீ விபத்து, வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீண்டகாலமாக வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்தமை தொடர்பாக மகரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மகரகம - பமுனுவ வீதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்திலேயே நேற்று மாலை இந்தத் தீ பரவியது. 

பின்னர் அதனைக் கண்ட பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். 

இதன்போது வீட்டிற்குள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த இரண்டு ஆண்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தின் தலைவருமே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகினர். 

எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீட்டின் அறையொன்றிற்குள் குறித்த குடும்பத் தலைவரின் 55 வயது மனைவியும் 16 வயது மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். 

அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான வீட்டின் உரிமையாளரும் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக மகரகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title