Apr 19, 2026 - 10:35 PM -
0
லூசியானாவின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை ஒரு குடும்பத் தகராறு என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 05:00 மணியளவில், ஒரு நபர் 10 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேக நபரைக் பொலிஸார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
