Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (20.04.2026)!

Apr 20, 2026 - 09:27 AM

இன்றைய ராசிப்பலன் (20.04.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (20) ​ரிஷப ராசியில் கிருத்திகை பின் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இதனால் மாளவ்ய யோகம் உருவாகிறது. இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம். அட்சய திருதியை சுப நாள். 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். நாள் முழுவதும் சோம்பலாக உணருவீர்கள். இன்று நீங்கள் சிறு மன அழுத்தம் உணர்வீர்கள். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயற்சி செய்யவும். பணியிடத்தில் சூழ்நிலை எதிர்பாராத விதத்தில் பல மாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். அதனால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் மோதல்களை தவிர்ப்பது நல்லது. 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்குப் பணிச்சுமை மிகுந்த நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக செயல்படுவது மற்றும் முடிவு எடுப்பது நல்லது. இது இழப்புகளை தவிர்க்க உதவும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிதி நிலையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். வேலையில் சூழ்நிலைகள் எதிர்பார்த்த விதத்தில் இருக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். ஒரு குறிப்பிடத்தக்க விஷயங்களில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். அது தொடர்பாக எடுக்கும் முயற்சிகளும் நல்ல பலன் தரும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பயனடைவார்கள். வணிகர்கள் தொழிலில் புதிய உத்திகளை கையாள நல்ல பலன் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் வழிகாட்டுதல் பெறுவீர்கள். இன்று முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பொறுமையாக செயல்படுவது வரவிருக்கும் சவால்களை சமாளிக்க உதவும். 

கடகம் ராசி பலன் 

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக அமையலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் உத்திகள் வேலையை முடிக்க சாதகமாக இருக்கும். இன்று எந்த விதமான ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் தேவையற்ற சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று செலவு குறைத்து சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளில் சிறப்பு எச்சரிக்கை தேவை. இன்று நீங்கள் தொழில் முன்னேற்றத்தையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். 

சிம்மம் ராசி பலன் 

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய புதிய யோசனை நல்ல பலனை பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் உள்ள மனக்கசப்புகள் தீர்க்க சரியான தருணம். நண்பர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு நன்மை விளையும். உறுப்பினர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று நீங்கள் தொழில் முன்னேற்றத்தையும், அங்கீகத்தையும் பெற வாய்ப்பு உண்டு. கூட்டான்மை விஷயங்களில் ஏற்படும் குழப்பங்கள் தீர்க்க சிரமம் ஏற்படும். உங்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான ஒரு நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனம் கலக்கம் தணியும். இன்று நீங்கள் பிறருக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் நேர்மையுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் நிச்சயமாக வெற்றி தரும். பரிவினை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்கவும். இன்று நீங்கள் தொழிலில் முன்னேற்றத்தையும் அங்கீகாரத்தையும் பெற வாய்ப்பு உண்டு. இன்று சக ஊழியர்களிடம் எந்தவித தகராறுகளையும் தவிர்ப்பது அவசியம். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பகுதி சில நல்ல செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் குழு பணி நல்ல பலனை தரும். அதை கண்டு சகஊழியர்களும் மகிழ்ச்சியடைவார்கள். வணிகம் மற்றும் பண பரிமாற்றங்களில் சில இடர்கள் அல்லது ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த நாள். இன்று உங்களுடையசெலவுகள் சற்று அதிகரிக்கும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று ஸ்டாலின் முற்பகுதியில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். மாலை பொழுதில் பல லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். பயணங்கள் மேற்கொள்ள தயாராக இருக்கவும். எதிர்நோக்கி உசில நல்ல செய்திகள், அல்லது விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். இன்று ஒரு குறிப்பிடத்தக்க பணி சார்பாக கவலையை தரக்கூடியதாக அமையும். இன்று வேலை தொடர்பாக ஊழியர்கள் நல்லது வணிக பங்காளிகளுடன் எந்தவித கருத்து வேறுபாடுகளிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான ஒரு நாளாக இருக்கும்; பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்று நீண்ட காலம் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. பயணங்கள் மேற்கொள்வதும், காரியங்களை செய்து முடிக்கவும் சாதகமான நாளாக இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். நிதி சார்ந்த விஷயங்களில் அனுபவம் உங்கள் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது உங்களுக்கு நல்ல பலன் தரும். 

மகரம் ராசி பலன் 

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று யாரிடமும் எந்தவித கருத்து வேறுபாடு உள்ளது முதல்களை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய பணி சூழல் மற்றும் வேலை வாய்ப்பு நிலைமை மேம்படும். வணிகத்தில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு.திருமண வாழ்க்கையில் இனிமையும் வெற்றியும் நிறைந்திருக்கும். இன்றைய நாள் முழுவதும் வேலை பலன் நிறைந்ததாக இருக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முடிப்பது நல்லது. உங்கள் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தி ஒழுங்கமைத்து செயல்படுவது நல்லது. பொறுமையுடன் செய்யப்படும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். 

கும்பம் ராசி பலன் 

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று குழுவாக இணைந்து செய்யக்கூடிய இந்த செயலிலும் ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது, திட்டமிடுவது நல்லது. குழு விவாதங்களில் உங்களுடைய ஆலோசனை மதிப்பை பெற்று தரும். இன்று லாபகரமான யோசனை உங்கள் தொழிலை முன்னேற்ற உதவும். நண்பர்களுடன் இருக்கும் போது பணத்தை கவனமாக செலவிடுவது நல்லது. நிதி விவகாரங்களில் நிலைத்தன்மை இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு மந்தமான நாளாக இருக்கலாம். இன்று எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வது நன்மை தரும். நீங்கள் தொடர்ந்து முயற்சிதான் தடைப்பட்ட பணிகளை முடிக்க முடியும். முடியும் இன்று இதில் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவுகள் ஏற்படும். இன்று முடிந்த வரை பயணங்களை தவிர்த்து குடும்பத்தினர் தான் நேரம் செலவிட முயற்சி செய்யவும். உங்கள் திறமையை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தவும். நிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டிய நாள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278