Oct 17, 2026 - 06:13 AM

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் உண்டாகும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
































