Header Logo
Mogo Academy

செய்திகள்
ஒரே நாளில் நீரில் மூழ்கி யாழ் இளைஞர்கள் இருவர் பலி

Apr 20, 2026 - 11:48 AM -

0

ஒரே நாளில் நீரில் மூழ்கி யாழ் இளைஞர்கள் இருவர் பலி
Mobitel inner

இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவரும் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த நபர் மற்றுமொருவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara