Apr 20, 2026 - 01:00 PM -
0
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ரசிகர்கள், தொண்டர்கள் படை சூழ விஜய் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரோடு ஷோ நடத்தி வரும் விஜய், புதுமண தம்பதியை வாழ்த்தினார்.
கொளப்பஞ்சேரி அருகே விஜயின் வாகனத்தை நிறுத்தி அவரிடம் புதுமணத் தம்பதி வாழ்த்து பெற்றனர்.
புதுமணத் தம்பதியை தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஏற்றி வாழ்த்து கூறிய விஜய் அவர்களை அனுப்பி வைத்தார்.
விஜயை காண திரளும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில், விஜய் தனது வாகனத்தில் ஏற்றி அவரிடம் திருமண வாழ்த்து பெற்ற புதுமணத் தம்பதி மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.
