Header Logo

சினிமா
மகள் பிறந்ததை அறிவித்த அட்லி

Apr 20, 2026 - 01:52 PM -

0

மகள் பிறந்ததை அறிவித்த அட்லி

இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லியின் மனைவி ப்ரியா இன்று (20) பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அந்த தகவலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார் அட்லி. 

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ப்ரியா அட்லி ஏப்ரல் 20 ஆம் திகதி அதாவது இன்று காலை பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். மீருக்கு தங்கச்சி பாப்பா வந்துவிட்டார். 

மகள் பிறந்த செய்தியை க்யூட்டான புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறார் அட்லி. எனக்கு தங்கச்சி வந்துவிட்டாள் என மீர் சந்தோஷப்படுவது போன்று உள்ளது அந்த அறிவிப்பு. 

ப்ரியா அட்லி மீண்டும் தாயாகப் போவதை போட்டோஷூட் நடத்தி அறிவித்தார்கள். அதன் பிறகு மும்பையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினார். 

அட்லியின் குடும்பம் பெரிதாகிவிட்டது. ப்ரியாவும், அட்லியும் 5 நாய்க்குட்டிகளை பிள்ளைகள் போன்று வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று பிறந்த மகளுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. 

அட்லியும், ப்ரியாவும் தங்களின் மகனுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் தந்தையின் பெயரை வைத்தார்கள். மகளுக்கு யார் பெயரை வைப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கி வரும் படத்திற்கு ராக்கா என பெயர் வைத்து அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் அந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். 

தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை மகள் துஆ மூலம் அறிவித்திருக்கிறார் தீபிகா படுகோன். கர்ப்ப காலத்தில் ராக்கா படத்தில் நடிக்கவிருக்கிறார் அவர். 

பாலிவுட்டில் 1,000 கோடி ரூபா ஹிட் படத்தை கொடுத்த அட்லி தற்போது டோலிவுட்டில் படம் எடுத்து வருகிறார். அந்த படம் 1,000 கோடி ரூபா அல்ல 2,000 கோடி ரூபா வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title