Header Logo
SLIC
மலையகம்
50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

Apr 20, 2026 - 02:07 PM

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவல, கேரோலினா பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வட்டவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 9.15 மணியளவில் நீர்கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது, முச்சக்கர வண்டியில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளனர். மகள்களில் ஒருவரே வண்டியைச் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கேரோலினா பகுதியிலுள்ள பெரிய வளைவில், எதிரே வந்த காருக்கு இடமளிக்க முயன்றபோது, முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய யுவதி, அவரது தாய், தங்கை மற்றும் தந்தை ஆகிய நால்வரும் காயமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278