Header Logo

சினிமா
4 ஆவது முறையாக பிரபல நடிகருடன் இணையும் நடிகை த்ரிஷா

Apr 20, 2026 - 03:46 PM -

0

4 ஆவது முறையாக பிரபல நடிகருடன் இணையும் நடிகை த்ரிஷா

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் மே 14 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து ராம், விஸ்வம்பரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இதன்பின் த்ரிஷா எந்த ஒரு திரைப்படத்தையும் கமிட் செய்யாத காரணத்தினால் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டார். இதன்பின் அந்த பேச்சு அப்படியே அமைதியானது. 

இந்த நிலையில், த்ரிஷா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம். 

இவர்கள் இருவரும் முதல் முறையாக ஆயுத எழுத்து திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதன்பின், தெலுங்கில் வெளிவந்த நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்தனர். இதை தொடர்ந்து அரண்மனை 2 படத்தில் இருவரும் நடித்திருந்த நிலையில், தற்போது 4வது முறையாக இணையப்போவதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளாராம். இப்படத்திற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title