Apr 20, 2026 - 04:25 PM -
0
சென்னை திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர் சத்யா மீது, அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவரால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் இன்று தீவிரமாக வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்த வேட்பாளர் சத்யா, பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். அப்போது திடீரென அங்கிருந்த இளைஞர் ஒருவர், வேட்பாளரை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார். இந்த எதிர்பாராத தாக்குதலால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தாக்குதல் நடத்திய அந்த இளைஞரை அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
