Header Logo
SLIC
பல்சுவை
கனவில் பணம் வந்தால் நிஜத்தில் என்ன நடக்கும்?

Apr 20, 2026 - 05:08 PM

கனவில் பணம் வந்தால் நிஜத்தில் என்ன நடக்கும்?
Mobitel Inner 1278
EDEX Inner

கனவில் பணம் வருவது நல்லதா கெட்டதா என்பதை கனவு சாஸ்திரம் விளக்குகிறது. பணம் கிடைப்பது, தொலைப்பது, சேமிப்பது, காற்றில் பறப்பது போன்ற கனவுகளுக்கான அர்த்தங்களையும், அவை உங்கள் நிதி நிலையை எவ்வாறு குறிக்கின்றன என்பதையும் இந்த கட்டுரை விவரிக்கிறது. 

இரவு தூங்கும்போது கனவு வர்றது இயல்பு. நாம எதை பத்தி அதிகமா நினைக்கிறோமோ, அதுதான் கனவுல வரும்னு சொல்வாங்க. அப்போ, கனவுல பணம் வந்தா என்ன அர்த்தம்? உண்மையிலேயே பணக்காரர் ஆகிடுவோமா? கனவு சாஸ்திரம் இதுக்கு என்ன பதில் சொல்லுதுன்னு பார்க்கலாம் வாங்க. 

உங்க கனவில் தரையில பணம் கிடைக்கிற மாதிரி வந்தால், அது ஒரு நல்ல அறிகுறி. சீக்கிரமே உங்களுக்கு திடீர் பண வரவு வரப்போகுதுன்னு அர்த்தம். உங்க உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும், நின்னு போன வேலைகள் எல்லாம் வேகமா முடியும். 

உங்க கனவில் தாள் காசுகள் காத்துல பறக்கிற மாதிரி வந்தா, நீங்க எதிர்பார்க்காத வழியில பெரிய பண லாபம் கிடைக்கப் போகுதுன்னு அர்த்தம். ஆனா, அந்தப் பணத்தைப் பிடிக்க முயற்சி பண்ற மாதிரி கனவு வந்தா, நீங்க தேவையில்லாத ஆசைகள் நேரத்தை வீணடிக்கிறீங்கன்னு அர்த்தம். 

ஒருவர் பணம் கொடுப்பது போல், உங்களுக்கு வர வேண்டிய பழைய கடன்கள் வசூலாகும். சமூகத்தில் உங்க மரியாதை உயரும். ஒருவேளை, பணம் கொடுப்பவர் இறந்தவராக இருந்தால், உங்களுக்கு பூர்வீக சொத்து அல்லது பெரியவர்களின் ஆசி கிடைக்கப்போகுதுன்னு அர்த்தம். 

பணத்தை தொலைப்பது போல, இது கெட்ட அறிகுறி இல்லை, ஆனா ஒரு எச்சரிக்கை. வரப்போற நாட்கள்ல முடிவுகள் எடுக்கும்போது கவனமா இருக்கணும். குறிப்பா, நிதி முதலீடுகளில் ஏமாற வாய்ப்பு இருக்குன்னு இந்தக் கனவு சொல்கிறது. 

நாணயங்கள் கனவில் வந்தால், நோட்டுகளுக்கு பதிலா சில்லறை காசுகள் கனவுல வந்தா, அது கலவையான பலன்களைத் தரும். நாணய ஓசை கேட்டா, வீட்டுல சின்ன சின்ன சண்டைகள் வரலாம். இது மன அமைதியின்மையைக் குறிக்குது. 

பணத்தை சேமிப்பது போல், நீங்க எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப கவலைப்படுறீங்க அல்லது கஞ்சத்தனமா இருக்கீங்கன்னு அர்த்தம். உங்க நிதி நிலையை சரிசெய்ய, நீங்க இன்னும் தெளிவா திட்டமிடணும்னு இது காட்டுது. 

திருடிய பணம் கனவில் வந்தால், நீங்க யாருக்காவது தீங்கு நினைக்கிறீங்க அல்லது தப்பான வழியில பணம் சம்பாதிக்க முயற்சி பண்றீங்கன்னு உங்க மனசாட்சி உங்களை எச்சரிக்குது. இது உங்க குற்ற உணர்ச்சியைக் காட்டுது. கனவு சாஸ்திரப்படி, கனவில் பணம் வருவது உங்க நிதி நிலையை விட, உங்க மனநிலையையே அதிகமா காட்டுது. ஏதாவது கெட்ட கனவு வந்தா, அடுத்த நாள் காலையில சாமி கும்பிட்டா அதோட தாக்கம் குறையும்னு சொல்றாங்க.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278