Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (22.04.2026)!

Apr 22, 2026 - 09:23 AM

இன்றைய ராசிப்பலன் (22.04.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (22) மிதுன ராசியில் மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் ராசியில் குரு - சந்திரன் சேரக்கூடிய கஜகேசரி யோகம் நடக்கிறது. இன்று விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று வளர்பிறை சஷ்டி. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய், அசுப கிரகங்களுடன் சேர்ந்துள்ள காரணத்தால். கசப்பை இனிமையாக மாற்றும் கலையை உணர்ந்து பயன்படுத்துவது நல்லது. இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகளை பெற வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள உங்களுடைய எந்த ஒரு வேலையையும் இன்று முடிப்பதற்கான நல்ல சூழல் அமையும். அன்புக்குரியவர்களுடன் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அமைதி மற்றும் மன நிறைவு கிடைக்கும். அரசியல் துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று தொழில் தொடர்பாக கூறிய ஒப்பந்தங்கள் உங்களுடைய நிலையை உங்களுடைய நிலைமை மற்றும் கௌரவத்தை உயர்த்தும். இன்று மாலை நேரத்தில் குடும்பத்தகாத சில நபர்களை சந்திப்பது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று பிள்ளைகளிடமிருந்து ஓரளவு ஆறுதல் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஏதேனும் ஒரு நற்செய்தி உங்களுக்குக் கிடைக்கக்கூடும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியின் சாதகமற்ற அமைப்பின் காரணமாக சில முக்கிய பொருட்கள் தொலைத்துவிடுவோமோ அல்லது திருடிவிடுவோமோ என்ற பயம் ஏற்படலாம். உங்கள் பிள்ளையின் கல்வி அல்லது போட்டியில் பெற்ற அசாதாரண வெற்றி தொடர்பான செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நிலுவையில் உள்ள பணிகள் மாலையில் எதிர்பார்த்த விதத்தில் முடிக்க முடியும். இரவில் ஒரு உற்சாகமான மற்றும் மங்களகரமான நிகழ்வில் பங்கேற்கும் நல்வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். 

கடகம் ராசி பலன் 

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று விரய ஸ்தானத்தில் சந்திரனின் பயணம் இருப்பதால் இன்று உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய வாழ்வாதார முன்னேற்றுவது தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் கடினமான சூழல் ஏற்படலாம். உங்கள் பிள்ளைகள் மீதான பொறுப்புகள் நிறைவேற்றப்படலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பிரயாணங்கள் இனிமையானதாக, பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்களுக்கு பிடித்த சில நபர்களை சந்திக்கவும் அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகளையும் கேட்பீர்கள். இன்று உங்கள் துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான சூரியன், நான்கு கிரகங்களுக்கு இடையில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு புதிய வருமான வரிகள் உருவாகும். இன்று உங்களுடைய இனிமையான பேச்சு குடும்பம் மற்றும் பணியிடத்தில் மரியாதையை பெற்றுத் தரும். கல்வி மற்றும் போட்டி தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி பெறுவீர்கள். சூரியனின் தாக்கம் காரணமாக உங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படலாம். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய எதிரிகள் தொல்லை குறையும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதன் பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருப்பார். உங்களுடைய வேலை வாய்ப்பு மற்றும் மனித துறையில் உங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் வெற்றியை தரும். குறிப்பாக உங்களுடைய பிள்ளைகளிடமிருந்து திருப்திகரமான மற்றும் இனிமையான செய்திகளை பெறுவீர்கள். இன்று சட்ட ரீதியான பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கலாம். சுபமான செலவுகளும் புகழும் அதிகரிக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றி இனிமையான சூழ்நிலை நிலவும். குடும்பம் உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல நாட்களாக நீடித்துவந்த நிதி பரிவர்த்தனை பிரச்சனைகள் தீரும். உங்கள் கையில் கணிசமான பணம் சேரக்கூடிய நாள். இன்று உங்களுடைய இது தோற்கடிக்கப்படுவார்கள். இன்று தொலைதூர பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. காதல் உறவு வலுவடைய வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய குடும்ப சூழல் மகிழ்ச்சியை தரும். திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து தடைகள் நீங்கும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று உங்களுடைய உடல்நலம் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். குறிப்பாக சிலருக்கு வாயு மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தரலாம். உடல் நலனை பேணுவதில் அக்கறை காட்டவும். இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான முயற்சிகளை காலையிலேயே திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது அல்லது பண பரிவர்த்தனைகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எதிரிகள் கூட உங்களை பாராட்டக்கூடிய நிலையில் இருப்பீர்கள். அரசியலில் உள்ளவர்கள் ஆளும் கட்சியுடன் நெருக்கம் கூட்டணியால் நீங்கள் பயனடைய வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் மாமியார் வீட்டில் இருந்து கணிசமான ஆதரவு, உதவிகள் கிடைக்கலாம். இன்று சமூக அல்லது கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய வேலை தொடர்பான இலக்கை காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும். 

மகரம் ராசி பலன் 

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் நிதிநிலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உங்களுடைய துறையில் புதிய முயற்சிகள் பலனளிக்கும். உங்களுக்கு கீழ் பணி புரியக்கூடிய ஊழியர்களிடமிருந்து மரியாதை, ஆதரவை பெறுவீர்கள். இன்று மாலை நேரத்தில் எந்தவித தகராறு அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முடிந்தவரை யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். இன்று பெற்றோர், குரு போன்றவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ளவும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் ஒழுக்கமான செயல்பாடு அவசியம். உங்களுடைய சிந்தனை மிக்க செயல்பாடு சிக்கல்களை தீர்க்க உதவும். 

கும்பம் ராசி பலன் 

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலம் மற்றும் உங்களின் தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். இன்று பணியிடத்தில் ஆதாரம் மற்ற சில பழி, தேவையற்ற சில பகையை எதிர்கொள்ள நேரிடும். இன்று சில பாதகமான செய்திகள் உங்களை தேடி வர வாய்ப்பு உண்டு. இதனால் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். எச்சரிக்கையாக இருப்பதும் மோதல்களை தவிர்க்க வேண்டிய நாள். இன்று எந்த விதமான அபாயகரமான முதலீடுகளையும் தவிர்க்க வேண்டிய நாள். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் பற்றிய கவலை அல்லது வேலை தொடர்பான சில நெருக்கடிகள் உங்களை தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் நிலவில் வந்த கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். இன்று உங்கள் நண்பர்களை சந்திக்கும் கிடைக்கும். ஆறுதலை தரக்கூடியதாக அமையலாம். ஆன்மிக தளங்களுக்கு பயணம் செல்லுதல், தொண்டு பணிகள் செய்வதற்கான விஷயங்களுக்கு குறித்து திட்டமிடுவீர்கள். இன்று எந்தவித பயணம் செல்வதிலும் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய திறமையை மெருகேற்ற வாய்ப்பு உண்டு.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278