Header Logo

வணிகம்
ITC Ratnadipa ஏற்பாட்டில் The Art & Life of Jayantha Premachandra கண்காட்சி நிகழ்வு

Apr 23, 2026 - 12:58 PM -

0

ITC Ratnadipa ஏற்பாட்டில் The Art & Life of Jayantha Premachandra கண்காட்சி நிகழ்வு

இலங்கையின் புகழ்பூத்த ஓவியர்களில் ஒருவரான அமரர் ஜெயந்த பிரேமச்சந்திர (1935-1988) அவர்களைக் கௌரவிக்கும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் கண்காட்சி நிகழ்வே The Art & Life of Jayantha Premachandra (ஜெயந்த பிரேமச்சந்திர அவர்களின் கலையும், வாழ்வும்) என்ற விசேட நிகழ்வாகும். ஜெயந்த பிரேமச்சந்திர அறக்கட்டளையுடன் இணைந்து ITC Ratnadipa ஹோட்டல் இந்த விசேட நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 23 முதல் 25 வரை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலிலுள்ள Kathanayake Lounge மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான நுழைவு இலவசம் என்பதுடன், அவரது அரிய படைப்புக்களைக் கண்டுகளிப்பதற்காக கலை ஆர்வலர்கள், மாணவர்கள், மற்றும் பரந்த சமூகம் என அனைவரும் அழைக்கப்படுகின்றனர். 

பிரேமச்சந்திர அவர்களின் மனிதநேய அணுகுமுறை மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டும் ஓவிய மொழி வடிவம் ஆகியவற்றின் ஆழமான அர்த்தத்தை இக்கண்காட்சி பிரதிபலிக்கின்றது. இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுகளை அச்சொட்டாக நமக்கு எடுத்துக்காட்டும் அதேவேளை, மனிதநேயம், கருணை, மற்றும் சுதந்திரம் ஆகிய பரந்த கருப்பொருள் வெளிப்பாடுகளை இக்கண்காட்சி கொண்டுள்ளது. 1950 முதல் 1980 கள் வரையான காலப்பகுதியில் 45 தனிக் கண்காட்சி நிகழ்வுகளுடன் ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், ஸ்கன்டிநேவியா, முன்னாள் சோவியத் ஒன்றியம், மத்திய கிழக்கு, மற்றும் ஆசியா என சர்வதேச அளவில் அவருடைய படைப்புக்கள் கலை ஆர்வலர்களை எட்டியுள்ளன. இக்கண்காட்சி நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதியில் அதற்கு இணையாக இடம்பெறுகின்ற கலந்துரையாடல்கள் மற்றும் செயலமர்வுகள் அடங்கிய விசேட நிகழ்ச்சித்திட்டமானது ஓவியக் கலைஞரின் வாழ்வு, கையாண்ட நுட்பங்கள், மற்றும் அழியாத செல்வாக்கு குறித்த ஆழமான அறிவை வழங்கும்.  ஏப்ரல் 23 மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ள ‘Jayantha Premachandra: Visual Thinking, Exaggeration, and Artistic Practice’ என்ற உரையாடல் நிகழ்வில் கொழும்பு கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கட்புலக் கலைகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி ஜெகத் ரவீந்திர மற்றும் சட்டத்தரணியும், தீவிரமான கலை ஆர்வலருமான ஷானக அமரசிங்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். 

* ஏப்ரல் 24 மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ள ‘Insight for The New Generation by Jayantha Premachandra’ என்ற உரையாடல் நிகழ்வை இஷானி சேனாதீர (கலைத்துறை முதல்வர் - சாந்தி நிகேதன், B.A, Col) அவர்கள் நிகழ்த்தவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ள ‘The Art of Framing’ என்ற செயலமர்வு மற்றும் உரையாடல் நிகழ்வில் ஷனிலா அலஸ் - Curado அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நளினி தங்கவேலு (Foto Design அமைப்பின் முகாமையாளர்) ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். 

* ஏப்ரல் 25 தின நிகழ்வுகள் காலை 10.30 மணிக்கு கொழும்பு கட்புலக் கலைகள் பீடத்தின் ஓவியப் பிரிவின் விரிவுரையாளர்கள் நடத்தவுள்ள ‘Art Techniques And Methodology: An Introductory Demonstration’ என்ற செயலமர்வுடன் ஆரம்பிக்கவுள்ளன. மாலை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் மாலை 5.30 மணிக்கு Beyond Borders: The Shared Artistic Tradition of Jayantha Premachandra என்ற தலைப்பில் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கலாநிதி பினா காந்தி தியோரி அவர்களின் உரையாடல் நிகழ்வும், மாலை 6.30 மணிக்கு ‘Who Owns Art? From Closed Circles to Open Horizons’ என்ற தலைப்பில் மகாராஜா நிறுவனத்தின் குழும நிறைவேற்றுப் பணிப்பாளர் செவான் டானியல் அவர்களின் உரையாடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன. 

இலங்கைக்கான பிராந்திய முகாமையாளரும், கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலின் பொது முகாமையாளருமான கீனன் மெக்கன்சி அவர்கள் இந்த ஒத்துழைப்பு குறித்து கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் புகழ்பூத்த ஓவிய மேதையின் கலைப்படைப்புக்களைக் கொண்டாடுவது என்பது ITC Ratnadipa ஹோட்டலில் எமது தனித்துவத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. எமது ITC Ratnadipa ஹோட்டலில் உள்ளூர் கலைஞர்களின் சிறப்பைக் காண்பித்து, படைப்பாக்கத்தில் ஆர்வம் கொண்ட பரந்த சமூகத்துடன் நாம் எப்படியாக ஈடுபாடுகளைப் பேணி வருகின்றோம் என்பதை இது சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. எம்மைப் பொறுத்தவரை ஜெயந்த பிரேமச்சந்திர அறக்கட்டளையுடன் கைகோர்ப்பது என்பது இயல்பான மற்றும் அர்த்தம் நிறைந்த ஒரு முயற்சியாகவுள்ளது. இக்கண்காட்சி மற்றும் செயலமர்வு நிகழ்வுத் தொடரின் மூலமாக சர்வதேசரீதியாக புகழைச் சம்பாதித்துள்ள ஒரு கலைஞரைக் கௌரவிப்பது மாத்திரமன்றி, இத்துறையில் வளர்ந்து வருகின்ற திறமைசாலிகளைத் தட்டிக்கொடுத்து, வளர்ப்பதற்கான மேடையொன்றைத் தோற்றுவிப்பதற்கும் எமக்கு இடமளிக்கின்றது.” 

ஜெயந்த பிரேமச்சந்திர அறக்கட்டளையின் தலைவர் நிலங்கா பிரேமச்சந்திர அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஜெயந்த பிரேமச்சந்திர அவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க கலைப் படைப்புக்களைப் போற்றிக் கொண்டாடி, மீள்நினைவுபடுத்துவதற்கான தனித்துவமான மேடையை ITC Ratnadipa உடனான இந்த ஒத்துழைப்பு எமக்கு வழங்குகின்றது. அவரது படைப்புக்களை இந்த அளவில் வெளிக்காண்பிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளமை, அவரது ஓவியப்படைப்புக்களில் பொதிந்துள்ள ஆழமான கதைகள், சிந்தனைகள், மற்றும் மனித அனுபவங்கள் ஆகியவற்றை அறக்கட்டளையுடன் ஒன்றுசேர்ந்து ஆராய்வதற்கு அனைவருக்கும் இடமளிக்கின்றது. இந்த செயலமர்வுகள், கலந்துரையாடல்கள், மற்றும் கண்காட்சிகள் மூலமாக ஓவியக்கலை தொடர்பான தேடல் ஆர்வத்தை வளர்த்து, படைப்பாக்கத்திறனை ஊக்குவித்து, அர்த்தமுள்ள வழிகளில் ஈடுபாடுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிப்பதே எமது நோக்கம். அவருடைய மரபின் சிறப்பும், தனித்துவமும் எதிர்காலத் தலைமுறைகள் மத்தியிலும் எதிரொலிப்பதை உறுதி செய்வதே எமது அவா.” 

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு +94 77 768 1114 அல்லது +94 70 384 2494 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும். இது தொடர்பான பிந்திய தகவல் விபரங்கள் மற்றும் செயலமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பதிவுகளை மேற்கொள்வதற்கான இணைப்புக்கள் ITC Ratnadipa ஹோட்டல் மற்றும் ஜெயந்த பிரேமச்சந்திர கலை அறக்கட்டளை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாகக் கிடைக்கின்றன.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title