Header Logo

செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

Jul 7, 2026 - 06:01 PM -

0

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இன்று (07) விளக்கமளித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்றும் கூறினார். 

அத்துடன், இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வந்த கைதிகள், அங்கிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியுள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கைதிகள் தப்பியோடுவதைத் தடுப்பதற்கும் எடுக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறையாகவே பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இங்கு தெரிவித்தார். 

இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

"சிறைச்சாலை வளாக அமைப்பின்படி பிரதானமாக இரண்டு கதவுகள் உள்ளன. முதலாவதாக இரும்புக்கதவும், அதற்கு அடுத்ததாக மரக்கதவும் இருக்கும். இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவை நோக்கி வந்திருந்தனர். இந்த மரக்கதவுக்கும் இரும்புக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ளன. இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்து, இந்த மரக்கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை என்னால் மதிப்பிட முடியாது. எனவே, இந்த நேரத்தில் சிறை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். சிறை அதிகாரிகள் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கலாம். 

அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்திருந்த ஒரு சூழலில், அவர்கள் இரும்புக்கதவை உடைத்து மரக்கதவு அருகில் வரை வந்துவிட்டனர். அந்த நேரத்தில் எங்களது சிறை அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையானோர் உள்ளே கைதிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் சென்றிருந்தனர். ஆனால், அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் தான் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் அந்த மரக்கதவூடாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்." என்றார்.


MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி