Header Logo
Mogo Academy

வணிகம்
கேம்பிரிட்ஜ் விருது நிகழ்வு 2026, IIT–PDU இல் வெற்றிகரமாக நிறைவுற்றது

Apr 23, 2026 - 01:17 PM -

0

கேம்பிரிட்ஜ் விருது நிகழ்வு 2026, IIT–PDU இல் வெற்றிகரமாக நிறைவுற்றது
Mobitel inner

IIT–PDU இன் PDU பிரிவானது 2026 ஏப்ரல் 4 ஆம் திகதி சிறப்பான கேம்பிரிட்ஜ் [Cambridge] விருது வழங்கும் நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி, கல்விசார் அபிவிருத்தியையும் மாணவர் சாதனைகளையும் கொண்டாடியது. 

IIT–PDU இன் PDU பிரிவு A1 முதல் C2 நிலைகள் வரை கேம்பிரிட்ஜ் ஆங்கில பாடத்திட்டங்களை வழங்குவதுடன், அங்கீகரிக்கப்பட்ட இணையதள ஆங்கிலத் திறன் பரீட்சை [Linguaskill English] நிலையமாகவும் செயல்பட்டு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழித் தகுதிகளை மாணவர்கள் அடைய உதவுகிறது. 

இந்த நிகழ்வானது அங்கீகரிக்கப்பட்ட இணையதள ஆங்கிலத் திறன் திட்ட மாணவர்களின் அர்ப்பணிப்பையும் முன்னேற்றத்தையும் பாராட்டியது. மேலும் Linguaskill பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களையும் கௌரவித்தது. A1 முதல் C1 நிலைகள் வரை உள்ள இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; இது அவர்கள் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தியதில் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டுக்கான பாராட்டாகும். இந்த நிகழ்வை சிறப்பித்த முக்கிய விருந்தினர்களில் IIT நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சுதர்ஷன் வெலிஹிந்த, Cambridge English Sri Lanka வின்வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் திரு. ஹாஸிக் பெரோஸ், மற்றும் தொழில்சார் சார் அபிவிருத்திப் பிரிவின் பீடத் தலைவர் திருமதி அச்சினி பெர்னாண்டோ ஆகியோர் அடங்குவர். 

இந்த விழாவில் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் பெருமையும் மறக்கமுடியாத அனுபவமும் அளிக்கும் சூழலை உருவாக்கினர். 

கேம்பிரிட்ஜ் விருது 2026, நிகழ்வானது IIT–PDU இன் கல்விசார் சிறப்பிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளையும் உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக திகழ்ந்தது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara